பிரபஞ்சம் எப்படி உருவானது? பூமி எப்படி உருவானது? அதில் மனித இனம் எவ்வாறு தோன்றியது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகளாக பல கோட்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருசெல் உயிரியில் இருந்து பூமியில் பரிணாமம் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த பரிணாமத்தையும் இன்றைய பூமியின் நிலையையும் பெருவெடிப்பில் இருந்து பார்க்கலாம்.
பெருவெடிப்பு (Big Bang Theory ) இன் பின்னர் பிரபஞ்சம் உருவாகி அது விரிவடைந்து கொண்டே செல்கின்றது. அப்படி விரிவடையும் போது (எமது) சூரியக் குடும்பம் உருவாகின்றது. படிப்படியாக இந்தச் சூரியனைச் சுற்றி கோள்கள் உருவாகத் தொடங்குகின்றன.
சூரியனில் இருந்து பிரிந்த நெருப்பு பிழம்புகள் ஈர்ப்பு விசையால் கட்டுண்டு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வர ஆரம்பிக்கின்றன. அப்போது எமது பூமி ஒரு நெருப்புப் பிழம்பாகவே காணப்படுகின்றது. நீர் உட்பட எதுவித கணிமமும் அதில் இருக்கவில்லை. வெறும் நெருப்புப் பந்து மாத்திரமே.
சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு…
தீப்பிழம்பாக சுற்றிக்கொண்டு இருக்கும் பூமியில் சாம்பல், தூசுத்துணிக்கைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக தீப்பிழம்பாக இருந்த பூமியின் மேற்பரப்பில் சாம்பல் மற்றும் தூசுத் துணிக்கைகள் உருவாக ஆரம்பித்து ஒருவித திடத்தன்மையை பூமி அடைகின்றது. இப்போதும் பூமியில் நீர், பனி என்று எதுவும் இல்லை.
நீர் எப்படி பூமியில் தோன்றியது?…
இந்தக் கேள்விக்கான பதில் 1985 களில் நாசாவினால் கொடுக்கப்பட்டது. அதாவது தீயாக இருந்த பூமியில் இயற்கையாக நீர் உருவாகிட வாய்ப்புகள் ஏதும் இல்லை. வேற்றுக்கிரகங்களில் இருந்தே அது பூமிக்கு வந்தது என்று நாசா கண்டுபிடித்தது. வால் நட்சத்திரங்களும், எரிகற்களுமே இப்போது பூமி இந்த நிலையை அடைந்ததற்கு மூல காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வெறும் நெருப்புப் பந்தாக இருந்த பூமியில் எரிகற்களும், வால் நட்சத்திரங்களும் தொடர்ச்சியாக மோத ஆரம்பிக்கின்றன. இப்படி வந்து மோதிய கற்களில் நீர்ம நிலையை உறைநிலையில் வைத்து இருக்கக்கூடிய கிரிஸ்டல் துகள்கள் காணப்பட்டுள்ளன. இந்த துகள்கள் ஓரிரு தினங்களில் பூமியில் சேர்ந்து பாரிய கடல்கள் உருவாகவில்லை.
இந்த செயற்பாடு சுமார் ஒன்றறைக் கோடி ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. இப்படியாக பூமியில் மோதிய வான்பொருட்களில் காணப்பட்ட துகள்கள் பூமியில் காணப்பட்ட வெப்பம், தூசு மற்றும் இயற்கையாக உருவாகிய வேதியல் பொருற்களினால் பூமியில் நீர் உருவாகியது. இதற்காக கோடிக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு…
எந்தவோர் செயற்பாடும் தொடர்ச்சியாக நடைபெறும் போது தவறுதலாக ஏதாவது நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. கற்பனைக்கு எட்டாத வகையில் கோடிக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்ற செயற்பாட்டினால் நீர் உருவாகியது. அதன் பின்னர் மிக முக்கியமானதோர் விபத்து பூமியில் நடந்தது.
பூமியில் சேர்ந்த வேதியல் பொருட்கள், தட்பவெப்பம், இரசாயண மாற்றம், காஸ்மிக் கதிர்களின் விளைவு, நீர் இவ்வாறான பலவற்றின் விளைவால் கடலுக்கு அடியில் தற்செயலாக ஜீன் (Gene) உருவாகியது. இந்த ஜீன் ஒருசெல் உயிரியாக உருவாகியது. இதுவும் தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வாகவே அறிவியல் உலகம் கணித்துள்ளது.
இவ்வாறு ஒருசெல் உயிரியான ஜீன் உருவாக எடுத்துக்கொண்ட காலம் சுமார் 50 கோடி ஆண்டுகள் என்பது ஆச்சரியமான உண்மை. இப்படி உருவான ஒரு செல்உயிரி காலப்போக்கில் தன்னைத்தானே குளோனிங் செய்து கொண்டு மற்றுமோர் ஒரு செல் உயிரியை உருவாக்கியது. இப்படி உருவாக உயிரிகள் கடல் முழுவதும் பரவ ஆரம்பித்ததோடு பூஞ்சைகளையும், பாசிகளையும், தாவரவகைகளையும் உருவாக்கின.
சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு…
இது பூமியின் வரலாற்றில் முக்கியமான காலம். ஆம் அதுவரையிலும் ஒரு செல் உயிரிகளாக தன்னைத்தானே குளோனிங் செய்து பூமியை ஆக்கிரமித்திருந்தவை தற்செயலாக இரு செல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இன்னுமோர் உயிரியை உருவாக்கியது இற்றைக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே. இதுவே ஆண், பெண் என்ற சேர்க்கை வகைக்கு முதற்காரணியாக அமைந்தது.
அதன் பின் இந்த செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற ஆரம்பித்து பல கடல்உயிர்களையும், தாவரங்களையும் தோற்றுவித்தன. இந்த பரிணாமம் சுமார் 150 வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான உயிரிகள் உருவாகி மாற்றமடைய ஆரம்பித்தன.
சுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு…
இந்த காலப்பகுதியில் கடல் புழுக்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. நுண்ணுயிரிகளின் சேர்க்கையால் உருவான இந்த கடற்புழுக்களே மனிதனின் மூதாதையர்கள் எனலாம். 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான கடற்புழுக்கள் பவளப்பாறைகளில் இருந்து பிரிந்து நகரும் தன்மையை பெற்றது. இதுவே பூமியின் முதல் நகரும் உயிரி.
இப்போது இனப்பெருக்கம் அவசியமாகின்றது. தனது துணையினைத் தேட அந்த உயிரிக்கு ஒரு உறுப்பு அவசியப்படுகின்றது. சுமார் 52 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடற்புழுக்களுக்கு உடற்திசுக்களில் துளை போன்ற அமைப்பு பரிணமித்தது. அதுவே கண் ஆனது. இந்த செயற்பாடு ஆரம்பித்து சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு பின் அதாவது இன்றைக்கு 51 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கண்கள் இரண்டுக்கும் நடுவே மயிரிழை போன்ற ஒரு திசு உருவாகியது.
கண் நரம்புகளைச் சேர்த்து உருவான அந்த திசுவே மூளையானது. அதன் பின்னர் படிப்படியாக பரிணமித்த அந்த புழு கடலில் நகர்வதற்கு ஏதுவாய் தட்டையான உருவ அமைப்பை பெற்றுக் கொள்கின்றது.
சுமார் 37 கோடி ஆண்டுகளுக்கு முன்பு…
51 முதல் 37 கோடிகள் என்ற ஆண்டுகளின் கால இடைவெளியில் ஏற்பட்ட பரிணாமத்தினால் கடற்புழு மீன் போன்ற உயிரியாக மாறுகின்றது. ஆரம்பத்தில் ஒன்றும் இல்லாமல் தன் தேவைக்கு ஏற்ப பரிணமித்து சவால்களுக்கு முகம் கொடுத்து படிப்படியாக தன்மை மாற்றிக் கொண்டு மீனாக உருவெடுத்த அதே ஒரு செல் உயிரி அதன் பின்னரும் தப்பிக்கவில்லை. இதன் பரிணமிப்பும் முடிவுக்கு வந்துவிடவில்லை.
கடலில் பிறந்து கடலின் தேவைக்கு ஏற்ப பரிணமித்து வந்த அந்த உயிர் ஏன் தரைக்கு வந்தது…?
தொடரும்
Discussion about this post